மு.க.ஸ்டாலின்

“இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார் என எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ப.திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

பலநூறு அறிஞர்கள் இரண்டு ஆண்டுகளாக இரவும் பகலும் விவாதித்து - உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்துக்குக் காரணமானவர் தந்தை பெரியார் அவர்கள்!

நீதிக்கட்சி ஆட்சியால் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமையை - தமிழ்நாட்டை விட்டு பெரிதாக விரித்து இந்தியாவின் உரிமையாக ஆக்கியது அந்த சட்டத்திருத்தம். அத்தகைய திருத்தத்துக்கு அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கம்!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அன்று முன்னெடுத்த சமூகநீதிக் குரலானது இந்தியாவின் செவிகளில் எட்டியது. “சமூக நிலையிலும் கல்வியிலும் உள் இடஒதுக்கீடு செய்ய பிற்படுத்தப்பட்டவர்களுக்கென - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், (Socially and Educationally) பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பட்டியலின பழங்குடி மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றம் கருதி அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இந்த விதி தடை செய்யாது” - என்பதுதான் அந்த மகத்தான திருத்தம். இதன் மூலமாக தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சினார் தந்தை பெரியார்.

‘இந்த சட்டத் திருத்தத்துக்குக் காரணமே சென்னைதான்' என்று அன்றைய இந்தியாவின் தலைமை அமைச்சர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னார்!

தமிழர் தலைவரான தந்தை பெரியார் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான தலைவராக ஒளி வீசிய இடம் அது!

“இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!

அடுத்து வந்தது மண்டல் ஆணையம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் வழங்க பரிந்துரைத்தது மண்டல் ஆணையம். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போதும் தமிழகம்தான் முன்னிலையில் நின்று போராடியது.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் மண்டல் ஆணையத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்து வந்தன. 1990 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். அதனை செயல் முறைப்படுத்த வி.பி.சிங் அவர்கள் முயற்சித்ததைத்தான் அன்றைய பா.ஜ.க. தடுத்தது. குழப்பம் விளைவித்தது. ஆட்சியையே கவிழ்த்தது.

மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த அழுத்தம் கொடுத்ததன் மூலமாக தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்குமான பிதாமகராக எழுந்து நின்றார்!

இதோ இப்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு; திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக நீதி உறுதிக்குக் கிடைத்த வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 27.7.2020 அன்று, “அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கன இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

27 சதவிகிதமோ, 50 சதவிகிதமோ - எந்த அடிப்படையிலும் இடஒதுக்கீடு கிடையாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது.

இதில் ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் 21.10.2020 அன்று எழுத்துப்பூர்வமான மனுவில் அம்பலப்படுத்தி இருந்தார். தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இது குறித்த விரிவான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

“இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!

(31.5.2020) 2020 மே 28 அன்று 27 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது தி.மு.க. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னார்கள். உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தியது தி.மு.க. உயர்நீதிமன்றத்தில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உரிமை உள்ளது என்ற தீர்ப்பு 27.7.2020 அன்று கிடைத்தது.

இதனை வலியுறுத்திப்பேச அகில இந்தியத் தலைவர்கள் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைவருக்கும் கடிதமும் எழுதினார். ஒன்றிய அரசுக்கும் எழுதினார். பிரதமரிடம் தொலைபேசியிலும் பேசினார். 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத்தீர்ப்பைச் செயல்படுத்த பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தலைவர் மு.க.ஸ்டாலின். செயல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தி.மு.க. தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில்தான் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகுதான் ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் - இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார். அதனால்தான் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த சமூகநீதி ஆர்வலர்கள், பல்வேறு மொழிகளில் அவரைப் பாராட்டி, வாழ்த்தி செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

பெரியாரின் எழுத்துக்களை பல்வேறு மொழிகளில் இருந்து கேட்பதும், ‘எங்களுக்கு கலைஞரைப்போன்ற ஒரு தலைவர் இல்லையே' என்று வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் சொல்வதும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதையைப் பின்பற்றுங்கள்' என்று மராட்டியத்தில் இருந்து குரல் எழுவதும் கேட்கவும் பார்க்கவும் கண்கொள்ளாக் காட்சிகள்!

தமிழகத்தின் முதலமைச்சர் மட்டுமல்ல, இந்தியாவுக்கேதான்! ஆமாம்! இந்தியாவுக்கேதான்! எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.

banner

Related Stories

Related Stories