மு.க.ஸ்டாலின்

“எதிர்வரும் தேர்தல் போரில் சவால்களை எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெல்வார்” - சீதாராம் யெச்சூரி

தி.மு.கவை மெச்சத்தகுந்த வகையில் மு.க.ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். தமக்கான சவால்களை திறம்பட எதிர்கொள்ளக் கூடியவர் மு.க.ஸ்டாலின் என சீதாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.

“எதிர்வரும் தேர்தல் போரில் சவால்களை எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெல்வார்” - சீதாராம் யெச்சூரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்த காணொலி கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

சவால்களை எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார்!

தற்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தலில் போட்டியிட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

“எதிர்வரும் தேர்தல் போரில் சவால்களை எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெல்வார்” - சீதாராம் யெச்சூரி

ஆனாலும் அந்தச் சவால்களை எல்லாம் உறுதியுடன் எதிர்கொண்டு மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது. தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் போரில் நிச்சயம் அவர் வெல்வார். ஜனநாயகத்தைக் காக்க அனைத்து தரப்பினரையும் அவர் ஒன்றிணைத்து வருவது பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அவரது மறைவு மாபெரும் இழப்பு. அவரது மறைவுக்குப் பின்னர் தி.மு.கவை மெச்சத்தகுந்த வகையில் மு.க.ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். தமக்கான சவால்களை திறம்பட எதிர்கொள்ளக் கூடியவர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலகட்டம்!

மனிதாபிமானம், சமத்துவம், ஒற்றுமை இவைகளுடன் அரசியல் சட்ட கோட்பாடுகளை காக்கும் வகையில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய கால கட்டம் இதுவாகும். இதை அவரும் நன்கு உணர்ந்து நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கு ஏற்ப தலைமைப் பாங்குடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

இந்த இனிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையடைந்துள்ள நான், மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் அவர் நீண்ட நாள் வாழ இந்த பிறந்த நாளில் என்னுடைய நல்வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிக, மிக மகிழ்ச்சி அடைகிறேன்.” என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories