மு.க.ஸ்டாலின்

“மிஸ்டர்.ஊழல்மணி இன்றோடு உங்க கொட்டத்த அடக்குங்க; அதுதான் மரியாத” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தி.மு.கவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்குள் எஸ்.பி. வேலுமணி பிரச்னை ஏற்படுத்த முயன்றது குறித்து அவருக்கு எச்சரிக்கையுடன் அறிவுரையையும் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

“மிஸ்டர்.ஊழல்மணி இன்றோடு உங்க கொட்டத்த அடக்குங்க; அதுதான் மரியாத” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பத்தாண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் செய்த ஊழல், முறைகேடு பட்டியலை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தி.மு.கவின் இந்தக் கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அ.தி.மு.க அரசின் மீதான குற்றச்சாட்டுகளை தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரிடமும் முன்வைத்து வருகின்றனர். அவற்றையெல்லாம் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் சார்பில் தி.மு.கவினர் புகார் மனுவாக அளித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் சொந்த மாவட்டமான கோவையில் உள்ள தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரத்தில் தி.மு.கவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் மணியான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் ஊழல் முறைகேடுகளை மக்கள் முன்னிலையில் பட்டியலிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, மக்கள் கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அமோக வரவேற்பை குலைக்க வேண்டும் என்ற நோக்கில், அ.தி.மு.க மகளிர் பாசறையைச் சேர்ந்த பெண்ணை தி.மு.க தொப்பியுடன் கழக கூட்டத்திற்குள் அனுப்பி எஸ்.பி.வேலுமணியும் அ.தி.மு.கவினரும் பிரச்சனை ஏற்படுத்த முயன்றனர்.

அதனையடுத்து, கூட்டத்தில் பிரச்னை ஏற்படுத்திய அந்த பெண்ணை, அமைதியான முறையில் வெளியேற்றி போலிஸிடம் ஒப்படைக்குமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன் பின்னர் மக்கள் முன்னிலையில் பேசிய மு.க.ஸ்டாலின், “தி.மு.கவின் கூட்டத்தை கெடுக்கவேண்டும் என எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டுள்ளது எனக்கு நேற்றே தெரியும். ஒரு கூட்டத்தை தடுக்க சூழ்ச்சி செய்யலாம்.

ஆனால் அ.தி.மு.கவால் எந்த கூட்டத்தை நடத்த முடியாதபடி செய்ய எங்களால் முடியும். இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் தடையாக இருந்தவரைச் சரியாகக் கண்டுபிடித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டோம். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

மிஸ்டர் வேலுமணி அவர்களே… அமைச்சர் வேலுமணி அவர்களே… ஊழல் வேலுமணி அவர்களே… இன்றோடு உங்களது கொட்டத்தை அடக்கிக்கொள்ளுங்கள். இதேபோல தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இல்லை, உங்கள் முதலமைச்சர் கூட எங்கேயும் பேச முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் மரியாதை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். ” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories