அரசியல்

தி.மு.க மக்கள் கிராம சபையில் பிரச்னை செய்ய வேலுமணி அனுப்பிய பெண் - அம்பலமானது அ.தி.மு.கவின் சூழ்ச்சி!

தி.மு.கவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.கவினர் கோவையில் நடந்த கூட்டத்தின்போது பிரச்சனை கிளப்பியுள்ளனர்.

தி.மு.க மக்கள் கிராம சபையில் பிரச்னை செய்ய வேலுமணி அனுப்பிய பெண் - அம்பலமானது அ.தி.மு.கவின் சூழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.கவினர், கோவையில் நடைபெற்ற கூட்டத்திற்குள் புகுந்து பிரச்சனை எழுப்பியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரையடுத்த தேவராயபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு பேசினார்.

அப்போது தி.மு.கவினரைப்போல் கூட்டத்தில் புகுந்த அ.தி.மு.கவினர் முகக்கவசம் அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் வந்தனர். தி.மு.க நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பொறுக்க முடியாமல், அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே புகுந்து பிரச்சனை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையின் போது கடுமையாக கண்டித்தார். தி.மு.க மக்கள் கிராம சபை கூட்டத்திற்குள், தி.மு.க தொப்பியுடன் புகுந்த பூங்கொடி என்ற பெண் அ.தி.மு.க மகளிர் பாசறையைச் சேர்ந்தவர் என்பதும், அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்ட அந்த பெண், அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. கூட்டத்திற்கு வெளியே வந்து அமைச்சருடன் அவர் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் பிரச்னை ஏற்படுத்திய அந்த பெண்ணை, அமைதியான முறையில் வெளியேற்றி போலிஸிடம் ஒப்படைக்குமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories