மு.க.ஸ்டாலின்

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு உடனடியாக பரிந்துரை செய்க” - முதல்வரை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்!

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு உடனடியாக பரிந்துரை செய்க” - முதல்வரை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதினார். இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும், அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசால் கபளீகரம் செய்யப்படும் எனவும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் முன்பாக தி.மு.க இளைஞரணி - மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் உயர் சிறப்பு தகுதி, தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் நிலை உள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தெரிவித்துள்ளார்.

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு உடனடியாக பரிந்துரை செய்க” - முதல்வரை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது" என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது.

அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட - தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு - தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு - பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories