மு.க.ஸ்டாலின்

''எதையும் செய்ய முடியாத நிலையில் அ.தி.மு.க தற்போது உள்ளது'' - மு.க.ஸ்டாலின்

மத்தியில் உள்ள பா.ஜ.க-விற்கு எடுபுடியாக செயல்படுவது தான் அ.தி.மு.க.வின் லட்சியம் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வழக்குத் தொடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது.

2016-ல் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அரசு செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2016 தேர்தலுக்கு இடஒதுக்கீடு செய்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் அதை மாற்றி 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2016 தேர்தலுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

''எதையும் செய்ய முடியாத நிலையில் அ.தி.மு.க தற்போது உள்ளது'' - மு.க.ஸ்டாலின்

இந்த முரண்பாட்டை உணர்ந்த உச்சநீதிமன்றம் 2011ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என கூறியுள்ளது. இனிமேலாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை உச்சநீதிமன்றம் நிறுத்தியது, அ.தி.மு.க அரசுக்குக் கிடைத்த மரண அடி. மக்களைச் சந்திக்க தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. குடியுரிமை மசோதா தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏதோ தி.மு.க வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனச் சித்தரித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆனால், 12 மணி வரை திமுக உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.

தேர்தல் அறிக்கையாக இருந்தாலும் சரி, 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளாக இருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலையில் அ.தி.மு.க உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க-விற்கு எடுபிடியாகச் செயல்படுவது தான் இவர்களது லட்சியம்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories