மு.க.ஸ்டாலின்

''ஜனநாயகத்துடன் விபரீத விளையாட்டு நடத்தும் பா.ஜ.க அரசு இனியாவது திருந்த வேண்டும்'' - மு.க.ஸ்டாலின்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு நாளான இன்று உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

''ஜனநாயகத்துடன் விபரீத விளையாட்டு நடத்தும் பா.ஜ.க அரசு இனியாவது திருந்த வேண்டும்'' - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மகாராஷ்டிர மாநிலத்தில் சூழ்ச்சி செய்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மகாராஷ்டிராவில் இடைக்கால சபநாயகர் மூலம் நாளை மாலை 5 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. ரகசிய முறையில் இல்லாமல் வாக்கெடுப்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

''ஜனநாயகத்துடன் விபரீத விளையாட்டு நடத்தும் பா.ஜ.க அரசு இனியாவது திருந்த வேண்டும்'' - மு.க.ஸ்டாலின்

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அரசியலமைப்பு நாளான இன்று உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.

ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories