மு.க.ஸ்டாலின்

“விஷவாயு தாக்கி உயிரிழப்போரில் தமிழகம் முதலிடம்; நம் அனைவருக்கும் தலைகுனிவு” : மு.க.ஸ்டாலின் வருத்தம்!

கழிவு நீர் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“விஷவாயு தாக்கி உயிரிழப்போரில் தமிழகம் முதலிடம்; நம் அனைவருக்கும் தலைகுனிவு” : மு.க.ஸ்டாலின் வருத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா முழுவதும் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை விஷவாயு தாக்கியும், மலக் குழியில் மண் சரிந்தும் பல்வேறு பாதிப்புகளினால் 620 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் துப்புரவு பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவத்திற்கு முடிவு கட்டவேண்டும் தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கழிவுகளை அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்.

இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு. இதில் தி.மு.க. ஆட்சிக்காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலு, “மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை. நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories