மு.க.ஸ்டாலின்

“பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்” - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!

பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

“பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்” - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

“பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்” - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!

அதுமட்டுமல்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மொழியுரிமை மற்றும் இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதை நெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள்.

தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா! எனப் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

மேலும், சென்னை மெரினாவில் உள்ள தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் பெரியார் 141வது பிறந்தநாள் என பூக்களால் எழுதப்பட்டும், அலங்கரிக்கப்பட்டும் உள்ளது.

banner

Related Stories

Related Stories