மு.க.ஸ்டாலின்

ஏன் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்.. மழுப்பல் பதில் சொன்ன எடப்பாடி 

அத்தி வரதரை வழிபடச் சென்ற 4 பேர் கூட்ட நெரிசலால் இறந்துள்ளனர், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஏன் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்.. மழுப்பல் பதில் சொன்ன எடப்பாடி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று பதினெட்டாம் நாளாக தொடர்கிறது. அத்தி வரதர் வழிபாட்டுக்காக பல மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகை தந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் பலி ஆகியுள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது, அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். 4 பேர் இறந்துள்ளனர், 31 பேர் மயக்கமடைந்துள்ள செய்தி அரசுக்கு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர், பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க, இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75,000 பேர் தான் தினமும் வருகின்றனர். அத்திவரதரை நாள் ஒன்றுக்கு 1 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்கள் இறந்தது குறித்து விவரமான பதிலை பின்னர் அளிப்பதாக கூறினார்.

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

banner

Related Stories

Related Stories