மு.க.ஸ்டாலின்

மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை - முக.ஸ்டாலின் !

மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை - முக.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரமலான் திருநாளையொட்டி ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பெரவள்ளூரில் நடைபெற்றது. அதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் , "ஒவ்வொரு ஆண்டும் கொளத்தூர் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை உங்களுக்கு புனித ரமலான் வாழ்த்தோடு, நடந்து முடிந்து தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த உங்களுக்கு நன்றி கூறவும் வந்துள்ளேன்.நேற்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவெறி பிடித்தவர்களுக்கும், மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." என்றார்.

மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை - முக.ஸ்டாலின் !
banner

Related Stories

Related Stories