மு.க.ஸ்டாலின்

“மோடி வாயில் வடை சுட்டால்.. எடப்பாடி அடை சுடுகிறார்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியில் ஆளும் மோடியையும், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியில் ஆளும் மோடியையும், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி வாயில் வடை சுடுகிறார். எடப்பாடி பழனிசாமி அடை சுடுகிறார். இந்தத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறோம். மத்தியில் ஆளும் சர்வாதிகாரி மோடியையும், மாநிலத்தை ஆளும் உதவாக்கரை எடப்பாடியையும் ஒரே தேர்தலில் ஆட்சியை விட்டு அகற்றப்போகிறோம்.”

உதயசூரியன்
உதயசூரியன்

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குக்காக அ.தி.மு.க ரூ.650 கோடி விநியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் பிரதமர் அலுவலகத்தில் பத்திரமாக இருக்கின்றன. குட்கா விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

அவற்றையெல்லாம் இன்னும் விசாரிக்கவில்லை. ஆனால், வேலூர் தொகுதியில் அவர்களே பணத்தைக் கொண்டுவந்து வைத்து நாடகம் நடத்தி தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். 40 மக்களவைத் தொகுதிகளிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறுவது உறுதி.” என்றார்.

banner

Related Stories

Related Stories