மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு கபட நாடகம் ஆடுகிறது - கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டு ,குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் அதிமுக அரசு கபட நாடகத்தை தொடர்கிறது என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

mk stalin
twitter mk stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டு ,குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் அதிமுக அரசு கபட நாடகத்தை தொடர்கிறது என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள கழகத் தலைவர் முக.ஸ்டாலின் அதில்,

பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது.இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும்.குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories