கல்வி & வேலைவாய்ப்பு

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

சென்னையில் அருகே ஆவடியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தொழிற்சாலையில் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்பரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்ட இருக்கிறது

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. அரியலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை!

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துரை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் கிராம உதவியாளர் வேலைக்கு 30க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் வயது உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த செய்தி தொகுப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துரை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பணிபுரிய கிராம உதவியாளர் வேலைக்கு 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வடுகபாளையம், அழகியமணவாளம், சின்னப்பட்டக்காடு, குலமாணிக்கம் மேற்கு, ஆண்டிப்பட்டக்காடு, கடுகூர், கீழப்பழுவூர், விளாங்குடி, கோவிலூர், இலந்தைக்கூடம், பெரியநாகலூர், இராயம்புரம், மல்லூர், தூத்தூர் ஆகிய கிராமங்களில் தலா ஒரு காலிப்பணியிடம் என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செந்துறை வட்டாரத்திற்கு உட்பட்ட தளவாய், ஆலத்தியூர், அயந்தத்தனூர், அசாவீரன்குடிக்காடு, சிறுகளத்தூர், நக்கம்பாடி, சிறுகடம்பூர் ஆகிய கிராமங்களில் தலா ஒரு காலிப்பணியிடம் என மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அதேபோல உடையார்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட தண்டலை, குலோத்துங்கநல்லூர், குருவாலப்பர்கோயில், பிச்சனூர், தேவாமங்கலம், சாத்தம்பாடி, வெத்தியார்வெட்டு, உட்கோட்டை வடக்கு, அங்கராயநல்லூர் கிழக்கு, தத்தனூர் மேற்கு ஆகிய கிராமங்களில் தலா ஒரு காலிப்பணியிடம் என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட, இராங்கியம், சிலுவைச்சேரி, பெரியகிருஷ்ணாபுரம், அய்யூர், சிலம்பூர் தெற்கு, வரதாஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் தலா ஒரு காலிப்பணியிடம் என மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் காலிப்பணியிடம் அறிவிக்கபப்ட்டுள்ள கிராமம் அல்லது வட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

* 13.09.2021ம் தேதியின்படி 21 வயதில் இருந்து 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி, எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8* தகுதியானவர்கள் படித்தல், எழுதுதல் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

* படித்தல் எழுதுதல் திறனறிவுத் தேர்வு நவம்பர் 11ம் தேதியும், நேர்முகத்தேர்வு டிசம்பர் 15 மற்ற்ம் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்

* www.ariyalur.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 7.

***

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

2. National Thermal Power Corporation நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:

National Thermal Power Corporation Limited நிறுவனத்தில் பி.இ., பி.டெக் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு 800க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொறியியல் பாடப்பிரிவு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது... இந்தப் பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்... அதற்கான வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பொதுத்துறை நிறுவனமான National Thermal Power Corporation Limited நிறுவனத்தில் Engineering Executive Trainees வேலைக்கு 864 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Electrical பிரிவில் மொத்தம் 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 172 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 19 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 36 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 35 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 18 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க Electrical, Electrical & Electronics, Instrumentation & Control, Power Systerms & High Voltage, Power Electronics, Power Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech பட்டம் பெற்று கேட் - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mechanical பிரிவில் மொத்தம் 360 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 205 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 21 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 51 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 59 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க Mechanical, Production, Industrial Engineering, Production & Industrial Engineering, Thermal, Mechanical & Automation, Power Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech பட்டம் பெற்று கேட் - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Electronics மற்றும் Instrumentation பிரிவில் மொத்தம் 164 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 76 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 14 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 43 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 24 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Electronics, Electronics & Telecommunication, Electronics & Power, Power Electronics, Electronics & Communication, Electrical & Electronics, Electronics Instrumentation, Instrumentation & Control, Electronics, Instrumentation Control ஆகிய பாடப்பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech பட்டம் பெற்று கேட் - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Civil பிரிவில் மொத்தம் 30 காலிப்ப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 14 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 2 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 4 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Civil, Construction Engineering பாடப்பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech பட்டம் பெற்று கேட் - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mining பிரிவில் மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 11 இடங்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 3 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 5 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Mining Engineering பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech பட்டம் பெற்று கேட் - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் அளிக்கப்படும். 11.11.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் தளர்வுகள் அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.ntpc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நால் நவம்பர் 11.

-

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

3. ஆவடி ராணுவ ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு :-

சென்னையில் அருகே ஆவடியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தொழிற்சாலையில் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்பரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்ட இருக்கிறது... பெயிண்ட்டர், பிளம்பர், ஃபிட்டர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட்ட 10க்கும் மேற்பட்ட ட்ரேடுகளில் ஐடிஐ படித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்னப்பிக்கலாம். பயிற்சியின் போது உதவித்தொகையும் வழங்கப்படுகிறது... இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்ஹ செய்தி தொகுப்பில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் அருகே ஆவடியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தொழிற்சாலையில் ஐடிஐ படித்த 120 பேருக்கு அப்பரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 120 இடங்களில், Carpenter பிரிவில் ஒரு இடமும், Mechanical Draughtsman பிரிவில் 8 இடங்களும், Computer Operator & Programming Assistant பிரிவில் 20 இடங்களும், ElEctrician பிரிவில் 15 இடங்களும், Electronics பிரிவில் 10 இடங்களும், Fitter பிரிவில் 35 இடங்களும், Machinist பிரிவில் 12 இடங்களும், Motor Vehicle Mechanic பிரிவில் 5 இடங்களும், Painter பிரிவில் 2 இடங்களும், Plumber பிரிவில் ஒரு இடமும், Turner பிரிவில் 5 இடங்களும், Welder பிரிவில் 6 இடங்களும் உள்ளன.

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Computer Operator & Programming Assistant, Painter, Plumber, Welder ஆகிய டிரேடுகளில் ஒரு வருடமும், இதர டிரேடுகளில் 2 வருடங்களும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

Computer Operator & Programming Assistant, Painter, Plumber, Welder ஆகிய டிரேடுகளில் பயிற்சி சேருபவர்களுக்கு உதவித்தொகையாக 7,700 ரூபாயும், இதர டிரேடுகளில் பயிற்சியில் சேருபவர்களுக்கு 8050 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.

1.9.2022ம் தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த அப்பரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு www.rac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 11.

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

4. சிலம்பம், களரி ஆகிய பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு :

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சிலம்பம், களரி ஆகிய பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிலம்பம், களரி பயிற்சி பெற்று அதில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... வயது உச்சவரம்பு... ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சிலம்பம், களரி ஆகிய பயிற்சிகளை அளிப்பதற்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

களரிபயாட்டு பயிற்சி அளிப்பதற்கான வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் பெற்று களரிபயாட்டு அல்லது களரியடிமுறை விளையாட்டில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், B.P.Ed அல்லது களரிபயாட்டு விளையாட்டில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். 30.10.2022 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிலம்பம் பயிற்சி அளிப்பதற்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்து சிலம்பம் விளையாட்டில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், B.P.Ed அல்லது சிலம்பக் கலையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். 30.10.2022 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை... மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்க வேண்டும்.

www.tnpesy.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி

The Registrar

Tamilnadu Physical Education And Sports University

Melakottaiyur Post,

Chennai - 60 127

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 16.

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

5. இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு :-

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர், சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அச்சர்கர் துப்புரவாளர், காவலர் உள்ளிட்ட வேலைகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர், சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவார், சுயம்பாகி, மேளக்குழு, காவலர், துப்புரவாளர் ஆகிய வேலைகளுக்கு 9 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Diploma In Computer Science படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

மின் பணியாளர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Electrician டிரேடில் ஐடிஐ முடித்து B சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

அர்ச்சகர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, வேத பாடசாலை அல்லடுஹ் ஆகம பள்ளியில் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

ஓதுவார் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, வேத பாடசாலை அல்லது ஆகம பள்ளியில் 3 வருட ஓதுவார் பயிற்சி பெற்று தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

சுயம்பாகி வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆகம விதிப்படி நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும், திருக்கோயில் பூஜைகள் மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

மேளக்குழுவில் நாதஸ்வரம் பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, சமய நிறுவனங்கள் அல்லது இசை கல்லூரியில் நாதஸ்வர பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

காவலர் வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க காவலர் பணிக்கு ஏற்ற நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

துப்புரவாளர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, துப்புரவு பணியை செய்வதற்கு ஏற்ற நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் கல்வித் தகுதி பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயல் அலுவலர்

அருள்மிகு சித்திபுத்தி விநாயகர்

மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,

இராயப்பேட்டை,

சென்னை - 14.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 17.

***

தமிழக அரசு பணி உட்பட 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. வேலைவாய்ப்பு செய்தி!

6. பெங்களூரு பெல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் :-

பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் Porject Engineer, Project Supervisor ஆகிய வேலைகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Porject Engineer வேலைக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், Mechanical பிரிவில் 2 இடங்களும், Electrical பிரிவில் 7 இடங்களும், Electronics பிரிவில் 5 இடங்களும் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Mechanical, Electrical, Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.78,000 ஊதியம் வழங்கப்படும். 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Supervisor வேலைக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், Mechanical பிரிவில் 4 இடங்களும், Electrical பிரிவில் 7 இடங்களும், Electronics பிரிவில் 4 இடங்களும் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Mechanical, Electrical, Electronics, Instrumentation ஆகிய பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.43,550 ஊதியம் வழங்கப்படும். 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.edn.bhel.com என்ற இணையதளத்தில் நவம்பர் 15ம் தேதிக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தினை தரவிறக்கம் செய்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நவம்பர் 18ம் தேதிக்கு முன்பு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி

AGM (HR),

Bharat Heavy ElectricalS Ltd, Electronics Division, P.B.No.2606, Mysore Road, Bangaloe - 560 026. Karnataka

banner

Related Stories

Related Stories