கல்வி & வேலைவாய்ப்பு

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

State Bank Of India வங்கியில் Circle Based Officers வேலைக்கு 1422 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கவிமணி
Updated on

1. SBI வங்கியில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Circle Based ஆபிசர் வேலைக்கு ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது உச்சவரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

State Bank Of India வங்கியில் Circle Based Officers வேலைக்கு 1422 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பணிக்கு விண்ணபிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை ஊதியம் வழங்கப்படும். 21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

* எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

* தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

* எழுத்து தேர்வு டிசம்பர்4ம் தேதி நடைபெறும். எழுத்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் மாதம் இறுதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

* தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.

* www.sbi.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 7.

***

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

2. Indian Institute of Information Technologyயில் வேலைவாய்ப்பு :

காஞ்சிபுரத்தில் உள்ள Indian Institute of Information Technologyயில் Junior Research Fellow வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.31,000 ஊதியம் கொண்ட இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்... அதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட கூடுதல் விரங்களை இப்போது பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள Indian Institute of Information Technologyயில் Junior Research Fellow வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ECE பாடப்பிரிவில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், Electrical, Electronics, Instrumentation, Communication ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ME பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* இந்தப் பணிக்கு ரூ.31,000 ஊதியம் அளிக்கப்படும். 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

* www.iiitdm.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 8.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

3. ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

ONGC நிறுவனத்தில் Finance மற்றும் Accounts Officer, Marine Officer வேலைகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, MBA படித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் வயது உச்சவரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

* ONGC நிறுவனத்தில் Finance & Accounts Officer, Marine Officer ஆகிய வேலைகளுக்கு 56 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* Finance & Accounts Officer வேலைக்கு மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* பொது பிரிவினருக்கு 22 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 11 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 7 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 3 இடங்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

* இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்று, ICWA, CA அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இந்தப் பணிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும். 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* Secretariat Executive பிரிவில் Finance & Accounts Officer வேலைக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 3 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

* இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ICSI பிரிவில் தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும். 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* Marine Officer வேலைக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 3 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வெளிநாட்டிற்கு செல்வதற்கான போக்குவரத்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* இந்தப் பணிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும். 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* தகுதியானவர்கள் கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

* www.ongcinida.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 7.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

4. ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு :

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மேனேஜர் வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

* புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மேஜேனர் வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

* இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Life Science பாடப்பிரிவில் PhD பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* இந்தப் பணிக்கு ரூ.50,000 ஊதியம் அளிக்கப்படும். 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 10.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

5. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு :

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநர் மற்றும் ஓட்டுநர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட வேலைகளுக்கு 81 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது அதற்கான தகுதிகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநர், ஓட்டுநர், வார்டு உதவியாளர், மருத்துவமனை பணியாளர், வண்டி தள்ளுநர், துப்புரவு பணியாளர், ஆகிய வேலைகளுக்கு 81 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக நுட்புநர் வேலைக்கு 34 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு

* விண்ணப்பிக்க வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு 18 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

“SBI.. ONGC.. ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு” - #JOBOFFERS முழுவிவரம்!

* ஓட்டுநர் வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்திற்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு 18 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* வார்டு உதவியாளர் பணிக்கு 8 இடங்களும், மருத்துவமனை பணியாளர் வேலைக்கு 12 இடங்களும், வண்டி தள்ளுநர் வேலைக்கு 6 இடங்களும், துப்புரவு பணியாளர் வேலைக்கு 19 இடங்களும் காலியாக உள்ளன.

* இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.ariyalur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி :

முதல்வர்,

அரியலூர் அரசு மருத்துவமனை,

அரியலூர் மாவட்டம்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 11.

banner

Related Stories

Related Stories