ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : “மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க கூடாது” : காவல்துறை கட்டுப்பாடு !

ஜல்லிக்கட்டுக் காளைகளின் உரிமையாளர், உதவியாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : “மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க கூடாது” : காவல்துறை கட்டுப்பாடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் நிலையில் அவனியாபுரம் வாடிவாசல் பகுதியிலிருந்து, காளைகள் வரும் பகுதி, கலெக்சன் பாய்ண்ட், ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் சென்று மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

300 மாடுபிடி வீரர்கள், 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டி போட்டியை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதேபோன்று மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்சும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதிகளில் மீட்பு மற்றும் அவசர உதவிகளுக்காக தீயணைப்புதுறை, ரெட் கிராஸ் அமைப்பினர் பணியில் ஈடுபடுவர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : “மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க கூடாது” : காவல்துறை கட்டுப்பாடு !

போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். வெற்றிபெறும் காளையர்கள், காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பைக், குக்கர், பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படும். அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காவல்துறை விதித்துள்ள 10கட்டுப்பாடுகள்

அதன் விபரங்கள்:

1. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல்ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்களை முத்துப்பட்டி சந்திப்பு வரை மட் டுமே அனுமதிக்கப்படும்.

2. காளைகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள் அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்கப்பட்டு, பின்னர் 14.01.2024-ம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் ஜல்லிக்கட்டுக்காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவர்.

3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த புகைப்படத்துடன் கூடிய அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

4. ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக் கூடாது.

5. ஜல்லிக்கட்டுக் காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : “மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க கூடாது” : காவல்துறை கட்டுப்பாடு !

6. ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சி பெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

7. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும்

உரிய மருத்தவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.

8. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

9. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. கூடுதலான நபர்களை அனுமதித்து, அதன் விளைவாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. அனுமதி பெற்ற ஜல்லிக்கட்டுக் காளைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் கண்டிப்பாக முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு துணைபுரிபவர்கள் மற்றும் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories