பொங்கல் 2024

“நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது... சூளுரைப்போம்” : வைகோ பொங்கல் வாழ்த்து !

பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது... சூளுரைப்போம்” : வைகோ பொங்கல் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் சூளுரைப்போம்!" என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாள்... திராவிடர் திருநாள்... பொங்கல் திருநாள்... என்றெல்லாம் தமிழ் மக்களால் விழா எடுத்துக் கொண்டாடப் படுகிற உழவர் திருநாள் தமிழ் மக்களின் தொன்மையான விழாவாகும்.

உழவு செழிக்க துணை நிற்கும் கதிரவனுக்கும், பாடுபடும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா, வேளாண் திருவிழாவாக தமிழ் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு திராவிட இயக்கமே முதன்மையான காரணமாகும். தலைநகர் சென்னையிலும், தென்தமிழ்நாட்டிலும் பெருமழை - வெள்ளம் காரணமாக நம் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இழப்புக்கள் ஏராளம்! ஏராளம்!!

“நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது... சூளுரைப்போம்” : வைகோ பொங்கல் வாழ்த்து !

தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி துயர் துடைப்பு பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டார்கள். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கண்ணீர் சிந்திய மக்களுக்கு பல வகையிலும் உதவினார்கள். அவர்களின் விழி நீரைத் துடைத்திட மனிதநேயத்துடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட நல் உள்ளங்களை இவ்வேளையில் பாராட்டுகிறேன்.

ஆண்டுதோறும் ஊர்த் திருவிழாவாக உவப்புடன் கொண்டாடப்படும் கலிங்கப்பட்டி தமிழர் திருநாள் விழாவை இதன் காரணமாகவே நிறுத்தி வைத்துவிட்டோம். ஆனாலும்கூட, தமிழரின் பண்பாட்டுப் பெருமைமிகு அல்லவா இந்தப் பொங்கல் விழா! அந்த விழாவை வழமை போல விழா எடுத்துக் கொண்டாடி மகிழுங்கள். ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள்.

பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன்மாதிரி மாநிலமாக நமது தமிழ்நாடு வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சி அரசின் நீட்சியாக திராவிட மாடல் அரசினை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடத்தி அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

“நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது... சூளுரைப்போம்” : வைகோ பொங்கல் வாழ்த்து !

பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் உயிர்நிகர் இலட்சியங்களான மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பா.ஜ.க. தன் ஆட்சியைத் தக்கவைக்க மீண்டும் களத்தில் நிற்கிறது.

திராவிட மாடல் ஆட்சியினை திறம்பட நடத்தி வரும் திமுகழகத்துடன் இந்தியா கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக நாடு தழுவிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பொங்கல் விழாவினை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் ...!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories