இந்தியா

இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு தேடித்தேடி கைது செய்து வருகிறது.

இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) மூலமாக நடந்துள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்தும், இதற்கு காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்புரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இன்று காலை விடிந்ததும் இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் டெல்லியை நோக்கி வரத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை முடக்குவதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்கனவே 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதுடன், இணையச் சேவையையும் துண்டித்தது. இத்தடைகளையும் மீறி இன்று மாணவர்கள் டெல்லியில் குவியத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒன்றிய அரசு 23,000-க்கும் மேற்பட்ட போலீசாரையும் துணை ராணுவப் படையினரையும் குவித்துள்ளது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் ஜந்தர் மந்தர் நோக்கி வரும் இளைஞர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்துக் கைது செய்து வருகிறது. டெல்லி எல்லை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு அராஜகமாக நடந்து கொள்கிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்க வரும் இளைஞர்களை அங்கேயே போலீசார் கைது செய்து வருகிறார்கள். போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி வராமல் இருக்க, பேரிகார்டுகளில் அதிகாரிகள் 'போல்ட்' (bolt) போட்டுப் பூட்டியுள்ளனர்.

மேலும், இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பேரணியாக வர முயன்ற முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன், பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கைது செய்து மைதான வளாகத்தில் அடைத்து வைத்துள்ளனர்

இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!
இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குச் செல்லும் வழிகளைப் போலீசார் தடுப்புகள் மூலம் மறித்து, அவர் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

மேலும், மும்பையில் இருந்து டெல்லி வந்த CJP நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை விமானம் தரையிறங்கிய உடனேயே, அவர்கள் கீழே இறங்குவதற்கு முன்பாகவே விமானத்திற்குள்ளேயே டெல்லி போலீசார் கைது செய்து, இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

இதனால் டெல்லி முழுவதும் கடுமையான பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏதோ குற்றவாளிகளையும் தீவிரவாதிகளையும் வேட்டையாடுவதைப் போல, ஒன்றிய பா.ஜ.க அரசு மாணவர்களையும், இளைஞர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தேடித்தேடி கைது செய்து வருகிறது.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பாதுகாப்பதற்காக, வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களையே ஒன்றிய பா.ஜ.க அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருவதற்கு தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காக்புரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்களைத் தமிழகப் போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்துள்ளனர். டெல்லியில் பா.ஜ.க அரசு எப்படி இளைஞர்களைப் போராடவிடாமல் கைது செய்து வருகிறதோ, அதேபோலத் தமிழ்நாட்டிலும் போராடும் இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories