
மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே, திரிணாமுல் மற்றும் பா.ஜ.க.வின் வாக்கு எண்ணுகை முகவர்களிடையே வாக்குவாதம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே வாக்குவாதம் தொடங்கியதால் பரபரப்பு.
மேற்கு வங்கத்தின் நோவாபாரா தொகுதிக்குட்பட்ட பகுதியில் குப்பை போல் குவிந்து கிடந்த வாக்குச் சீட்டுகள் (VVPAT) பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவை மாதிரி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தியளிக்கவில்லை என பலரும் தெரிவித்ததையடுத்து, இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.






