இந்தியா

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி : யார் இந்த சூரிய காந்த்?

உச்சநீதிமன்றத்தின் 53 -ஆவது தலைமை நீதிபதியாக சூரிய காந்த் பதவியேற்றார்.

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி : யார் இந்த சூரிய காந்த்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 53 -ஆவது தலைமை நீதிபதியாக சூரிய காந்த் பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கும் சூரிய காந்த், 2027 ஆம் ஆண்டு பிப்.9 ஆம் தேத 65 ஆவது வயதில் ஆய்வு பெறுகிறார்.

யார் இந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்?

ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் சூர்யகாந்த. இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டு ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து ஒரு வருடத்திலேயே 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தின் 53- ஆவது தலைமை நீதிபதியாக சூரிய காந்த் பதவியேற்றுள்ளார்.

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்களர்களின் விவரங்களை வெளியிட வேண்டும், அனைத்து வழக்கறிஞர் சங்கங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது சூரிய காந்த் வழங்கி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories