இந்தியா

”வாக்குகளை வெளிப்படையாகவே திருடும் பா.ஜ.க” : மீண்டும் ஆதாரங்களுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பா.ஜ.கவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வெளிப்படையாகவே வாக்குகளை திருடிவருகின்றனர்.

”வாக்குகளை வெளிப்படையாகவே திருடும் பா.ஜ.க” : மீண்டும் ஆதாரங்களுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து, வாக்காளர் பட்டியலில் மோசடிகளை அரங்கேற்றி வருவதாக கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து குற்றம்சாட்டி இருந்தார்.

அப்போது, ஒரே வாக்காளர் கர்நாடகா, மகாராஷ்ரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்களித்துள்ளார் என கூறிய ராகுல்காந்தி, 70 வயது மூதாட்டி ஒருவர் முதல்முறை வாக்களாராக பதிவு செய்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

ஒரே படுக்கை அறைகொண்ட வீட்டின் முகவரியில், 60க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், பல வாக்காளர்களின் முகவரிகள் இல்லை என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் போலி வாக்காளர்களை அறிந்துள்ளதாகவும், இதுவரை தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்தும், அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து,ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அதில், பிரேசிலிய மாடலின் புகைப்படத்தைக் கொண்டு, 20 வெவ்வேறு பெயர்களில், ஹரியானாவின் 20 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி மக்களுக்கு சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பா.ஜ.கவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வெளிப்படையாகவே வாக்குகளை திருடிவருகின்றனர் என மற்றொரு குற்றச்சாட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பா.ஜ.கவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வெளிப்படையாகவே வாக்குகளை திருடிவருகின்றனர். லட்சக்கணக்கான பா.ஜ.க உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வெளிப்படையாகவே வாக்களிக்கின்றனர். இந்த திருட்டை மறைக்க அனைத்த ஆதாரங்களும் அழிக்கப்படுகின்றன. இப்படி ஜனநாயகப்படுகொலை நடந்து வருகிறது.” தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களுடன் சமூகவலைதளத்தில், பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories