இந்தியா

நாடகத்தில் நடிக்கும் போதே உயிரிழந்த 70 வயது நடிகர் : சோகத்தில் சக நடிகர்கள்!

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து நடிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடகத்தில் நடிக்கும் போதே உயிரிழந்த 70 வயது நடிகர் :  சோகத்தில் சக நடிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இமாச்சல பிரதேசம், சம்பா பகுதியைச் சேர்ந்தவர் அம்ரேஷ் மகாஜன். நாடக நடிகரான இவர், ராம்லீலா நாடகத்தில் தசரதனாக நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நாடகம் சம்பா பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக நடிகர்கள் கதறி அழுதனர்.

மேலும் இதுதான், நான் நடிக்கும் கடைசி நாடகமாக இருக்கும் என இறப்பதற்கு முன்பு சக நடிகர்களிடம் அம்ரேஷ் மகாஜன் கூறிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories