சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தி.மு.க ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து ஜனவரி மாதத்தில் இக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும்.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் 3,707 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இருந்து 8 ஆயிரம் கோடி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 14,746 கோயில்களில் திருப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, திருக்கோயில்களில் தற்காலிகமாக பணி செய்து வந்த 2,500 பேரை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மேலும் 1,500 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.