இந்தியா

Reels மோகத்தால் வந்த வினை : பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்!

மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு பைக் ஓட்டியபோது, பாம்பு கடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

Reels மோகத்தால் வந்த வினை : பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக். 35 வயதாகும் இவர் பாம்பு பிடி வீரராவார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார்.

பிறகு வனப்பகுதியில் பாம்பை விடுவதற்காக சென்றபோது, தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென பாம்பை கழுத்தில் சுற்றி வைத்துக் கொண்டு ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அந்நேரம் திடீரென பாம்பு அவரை கடித்துள்ளது. உடனே தீபக் தனது நண்பரை தொடர்பு கொண்டு தெரிவிந்துள்ளார். பிறகு விரைந்து வந்த அவரது நண்பர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சைப் பெற்றபோது, குணமடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் தீபக் அன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பிறகு இரவில் அவரது உடல்நிலை மோசடைந்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது சிகிச்சை மோற்கொள்ளப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 2020 - 2022 ஆண்டுகளில் மட்டும் பாம்புக்கடியால் 5,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories