பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தப் பணிகள் ஆணையம் வருகிறது. 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களின் பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மக்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்குவது அரசின் வேலை என்றும் அது தேர்தல் ஆணையத்தின் பணியல்ல என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் குடியுரிமையை சோதித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது முறையல்ல என்றும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள் உள்ளன அவர் கூறினார்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களிடமும், புதிய வாக்காளர்களிடமும் குடியுரிமை சான்று கேட்பது நியாயமான நடவடிக்கை அல்ல என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா விமர்சித்தார்.