தமிழ்நாடு

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

The Economist Intelligence Unit ஆய்வு அடுத்த 5 வருடத்துக்கு தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை குறிப்பிட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திராவிட மாடல் நிர்வாகத்தின் வெற்றி இது என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "தொழில் செய்வதற்கு உவப்பான சூழல் குறித்த The Economist Intelligence Unit ஆய்வு, 2025-2029 வரையிலான மாநிலவாரி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது.

தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல், தொலைநோக்கு கொண்ட தலைமை, சிறப்பான அரசு கொள்கைகள், அவற்றின் முறையான அமலாக்கம் ஆகியவை ஒன்று சேர்ந்த திராவிட மாடல் நிர்வாகத்தின் வெற்றி இது.

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !

சர்வதேச வாகன பெரு நிறுவனங்கள் தொடங்கி மின்சார வாகன நிறுவனங்கள் வரை, முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி, முன்னணி மின்சாதன நிறுவனங்கள் வரை, பல துறைகளை சார்ந்த முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தங்களின் முதலீடுகளுக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் கிடைத்திராத அளவுக்கு தொடர்ச்சியான சர்வதேச பாராட்டையும், அங்கீகாரத்தையும் இப்போது நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்த வரைபடம் வழிகாட்டும். தமிழ்நாட்டுக்கு வாருங்கள். தமிழ்நாட்டுடன் வளருங்கள்!"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories