இந்தியா

இவர் இந்து இல்லையா? : மத பிரச்சாரகர் மீது தாக்குதல் - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!

உத்தர பிரதேசத்தில் இந்து மத பிரச்சாரகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர் இந்து இல்லையா? :  மத பிரச்சாரகர் மீது தாக்குதல் - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்களுக்கான அரசு பா.ஜ.க அரசு என ஒருபுறம் பேசிக் கொண்டே பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் மீது தங்களது சாதிய கொடூரங்களை மற்றொரு புறம் அரங்கேற்றி வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மத பிரச்சாரகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”உ.பி.யில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இந்து மதப்பிரச்சாரகரை 50-க்கும் மேற்பட்ட உயர்சாதி இந்து சமூக விரோதிகள் சேர்ந்து அடித்து உதைத்து துவம்சம் செய்து, தலையை மொட்டை அடித்து, அவர்களது காலணிகள் மீது விழுந்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது.

வேறு மாநிலங்களில் ஏதேனும் கலகம் உருவாக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக் காத்திருக்கும் பாஜக, தங்களது ஆட்சி நடைபெறும் மாநிலத்தில், ஒரு இந்து மத பிரச்சாரகருக்கு மனுஸ்மிருதி அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் அநீதியில் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்? தாக்குதலுக்கு உள்ளானவர் இந்து இல்லையா? ஜெய் ஸ்ரீராம் கோஷம் மனுஸ்மிருதியையும், உயர்சாதி கோட்பாட்டையும் பாதுகாக்கத்தானா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories