இந்தியா

“கலைத்துறையினர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது!” : இந்திய தணிக்கை குழுவிற்கு கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்!

'ஜானகி vs கேரளா ஸ்டேட்' என்கிற படத்தில் கதாநாயகியின் பெயர் புராண பெயர் என்று கூறி சான்றிதழ் வழங்க மறுத்த, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிற்கு (CBFC), கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்!

“கலைத்துறையினர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது!” : இந்திய தணிக்கை குழுவிற்கு கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலக அளவில் வெளியாகும் திரைப்படங்கள், பலதரப்பட்ட மக்களின் நிலைகளை வெளிப்படையாக தெரிவித்து, உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வேளையில், அப்படங்களுக்கு சென்சார் என்கிற பெயரில் இந்திய திரையரங்குகளில் திரையிட மறுப்பு தெரிவிக்கும் வேலையை சரியாக செய்து வருகிறது இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு (CBFC).

இதனால், இந்தியாவில் உருவாகும் பல திரைப்படங்கள் இன்றளவும் மக்களின் பார்வைக்கு எட்டப்படாத அவலநிலை நீடித்து வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக, தற்போது மலையாளத்தில் தயாராகியிருக்கும் ஜானகி Vs ஸ்டேட் அஃப் கேரளா திரைப்படமும் இணைந்திருக்கிறது.

கலையின் வெளிப்படைத் தன்மைக்கு தடையிட்ட காலம் சென்று, தற்போது பெயர் சூட்டலால் திரைப்படத்திற்கு தடையிடும் அளவிற்கு சென்றுள்ளது இந்திய தணிக்கை குழு.

'ஜானகி vs கேரளா ஸ்டேட்' என்கிற படத்தில் கதாநாயகியின் பெயர் புராண பெயர் என்று கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க தெரிவித்துள்ளது இந்திய தணிக்கை குழு. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

“கலைத்துறையினர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது!” : இந்திய தணிக்கை குழுவிற்கு கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்!

வழக்கு விசாரணையில், இந்திய தணிக்கை குழுவை கண்டித்து, கேரளா உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்துள்ளது.

குறிப்பாக, “அனைத்து இயக்குநர்களுக்கும், என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கதை சொல்ல வேண்டும் என பாடம் எடுப்பீர்களா?

ஜானகி என்ற பெயரில் என்ன சிக்கல்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி நீதிக்காக போராடுபவருக்கு ஜானகி என பெயர் வைப்பதில் என்ன ஆகிவிடபோகிறது?

பாலியல் குற்றம் செய்தவருக்கு ராமா, கிருஷ்ணா, அல்லது ஜானகி என பெயர் சூட்டினால், அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர் என ஏற்றுக்கொள்ளலாமா? எனக்கு புரியவில்லை.

கலைத்துறையினரின் சுதந்திரத்தில், நீங்கள் தலையிடக்கூடாது. இதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து, படத்தின் கதாப்பாத்திரப் பெயரை மாற்ற முடியாது” என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால், பல காலமாக திரைத்துறையினரின் விமர்சனத்திற்குள்ளாகி வந்த இந்திய தணிக்கை குழு, தற்போது நீதிமன்ற கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories