இந்தியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையை சேர்ந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் 2000 ஆம் ஆண்டு ’காந்தா லகா’ ரீமிக்ஸ் பாடல் மூலம் பிரபலமானர். ஸ்வீட் ஹனி மிக்ஸ் மற்றும் கபி ஆர் கபி பார் ரீமிக்ஸ் போன்ற பாடல்களிலும் ஷெஃபாலி பங்கேற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த ’முஜ்சே ஷாதி கரோகி’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ’ஹுடகுரு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஷெஃபாலி ஜரிவாலா தனது கணவர் பராக் தியாகியுடன் நாச் பாலியே 5 மற்றும் நாச் பாலியே 7 படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் 13 சிசனில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள வீட்டில் இருக்கும் போது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு உடல்நிலை பாதித்துள்ளது. உடனே அவரது கணவர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories