மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு இந்தி திணிப்பு செய்துவருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த மாநில பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தி மொழி திணிப்பில் இருந்து விலகினார். இந்தி திணிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை திணிக்க மகாராஷ்டிரா பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திணிப்பு செய்வதற்கும், தேசியக் கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மெல்ல மெல்ல திணிக்கும் முயற்சியை கண்டு கொண்ட முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரரும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே இருவரும் மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த சகோதரர்கள், மாநில மற்றும் மராத்தி மொழி பாதுகாப்பதற்காக முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். மும்மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த குரல் இன்று மகாராஷ்டிரா வரை சென்றுள்ளது.