இந்தியா

”கடைசி மூச்சு வரை அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரை!

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலேவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

”கடைசி மூச்சு வரை அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழித்து, இந்துராஷ்டிரம் அமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம். இதை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் கனவு. இவர்கள் இருவரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள் - அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் - ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை.

மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம், அவை ஆட்சி மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் - ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? அவை நீக்கப்பட வேண்டும” என்று அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடைசி மூச்சு வரை அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என சூளுரைத்துள்ளார்.

”கடைசி மூச்சு வரை அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரை!

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”விளிம்புநிலை மற்றும் ஏழை - எளிய மக்களின் உரிமைகளை பறித்து அவர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதையே ஆர்.எஸ்.எஸ்-பாஜக நோக்கமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் போன்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை மக்களிடம் இருந்து பறிப்பதே அவர்களின் நிகழ்ச்சி நிரல். ஆர்.எஸ்.எஸ்-ஸின் இத்தகைய கனவை நாம் தடுத்தகாக வேண்டும். அவர்களை ஒருபோதும் வெற்றியடைய விடக்கூடாது. இறையான்மையை பாதுகாக்க துடிக்கும் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கடைசி மூச்சு வரை அரசியலமைப்பைப் பாதுகாப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories