இந்தியா

காஷ்மீர் தாக்குதல் - பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு : பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல் - பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு : பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் சவுதிஅரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திருப்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்துகிறது.

அதேபோல், அமெரிக்கா சென்று இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் தனது அமெரிக்கப் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்புகிறார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் எப்படி இந்த தாக்குதலை திட்டமிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரங்களும் தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories