இந்தியா

'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் : கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்து விஸ்வ இந்து பரிஷத் அராஜகம்!

குஜராத் மாநிலத்தில் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டு அங்கிருந்தவர்களை மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் : கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்து விஸ்வ இந்து பரிஷத் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்கள் பகுதிக்குள் இந்துத்துவ கும்பல் நுழைந்து மத வெறுப்பை தூண்டும் வகையில் ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். மேலும் அவர்களை ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்களை கூற வற்புறுத்தி, தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கிறிஸ்துவர்களின் ஆலயத்திற்குள் உருட்டுக்கட்டைகளுடன் நுழைந்து இந்துத்துவ கும்பல் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கிறிஸ்துவ மக்களின் ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 100க்கும் மேற்பட்ட கிஸ்துவர்கள் ஆலயத்திற்குள், தங்களின் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு உருட்டுக்கட்டைகளுடன் வந்த பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் குண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உருட்டுக்கட்டைகளை காட்டி அங்கிருந்த கிறிஸ்துவர்களை மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் மத வெறுப்பை ஏற்படுத்திய பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் குண்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான இத்தகைய தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி வருகின்றன. அதுவும் இது பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,குஜராத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories