இந்தியா

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து : பா.ஜ.க MP-க்களுக்கு நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்!

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த பா.ஜ.க எம்.பிக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து : பா.ஜ.க MP-க்களுக்கு நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது. தற்போது வக்ஃப் சட்டத்துக்கு தடை விதித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதே பா.ஜ.க. கடும்கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது. ”உச்சநீதிமன்றம் சட்டங்களை கையாண்டால் நாடாளுமன்றத்தை மூ டவேண்டியதுதான்” என்று பா.ஜ.க. எம்.பி நிஷிகாந்த் துபே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா காரணம் என்று கடுமையான குற்றம்சாட்டினர்.

மத கலவரங்களுக்கு உச்சநீதிமன்றமே பொறுப்பு என்றும் அவர் கூறினார். அதேபோல் மற்றொரு பா.ஜ.க. எம்.பி. தினேஷ் சர்மாவும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிபெயரைக் குறிப்பிட்டு மிரட்டல் விட்டிருக்கும் பா.ஜ.க. எம்.பி. மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தி.மு.க. செய்தித்தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், நாட்டின் சட்டங்களை பாதுகாப்பதற்காகவே உச்சநீதிமன்றம் உள்ளதாக கூறினார். ஒன்றிய பா.ஜ.க. அரசு, எந்த சட்டத்- தையும் மதிப்பதில்லை, அவர்கள் விரும்பியதை மட்டுமே செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது ,முன்னாள் நீதிபதிகளும் பா.ஜ.க எம்.பிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி,"மதச்சார்பற்ற நாடாக திகழும் நமது நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை உச்சநீதிமன்றத்திற்கு உள்ளதாக கூறினார்.

வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியதையடுத்து முதலில்பின்வாங்கிய ஒன்றிய அரசு, தற்போதுஅந்தச் சட்டத்தின் சில பிரிவுகளை செயல்படுத்தமாட்டோம் என்று கூறியதை ஏ.கே.கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர்ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தீர்ப்பைவிமர்சித்தது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததை தொடர்ந்து நள்ளிரவுக்கு பிறகுபா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா சமூக ஊடக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. எம்.பி. கருத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை என்றும் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories