உத்தரப்பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், பாதிக்கப்பட்ட பெண் முதுகலை பட்டப்படிப்பு மாணவி என்பதால், தனது செயலின் நன்மை, தீமையைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக இருப்பதாக கூறியுள்ளார்.
தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், மதுபோதையில் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்று, அந்த வேதனையை அவரே தனக்கு வரவழைத்து, அந்த சம்பவத்துக்கு அவரும் காரணமாக இருந்துள்ளதாக தெரிவித்தார்.
சூழ்நிலை குற்றத்தின் தன்மை, ஆதாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் நீதிபதியின் தீர்ப்புக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.