இந்தியா

பிரதமர் மோடி தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட வேண்டும் : குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி!

குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் டிராக்டர் பேரணிக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட வேண்டும் : குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தால்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொடர்பான தேசியக் கொள்கை கட்டமைப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் டிராக்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனப் பேரணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி தனது சர்வாதிகார, உணர்ச்சியற்ற அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories