இந்தியா

”சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை” : நாடாளுமன்றத்தில் கனிமொழி சோமு MP ஆவேச பேச்சு!

சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை என கனிமொழி சோமு MP குற்றம்சாட்டியுள்ளார்.

”சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை” : நாடாளுமன்றத்தில் கனிமொழி சோமு MP ஆவேச பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை என நாடாளுமன்றத்தில் தி.மு.க MP கனிமொழி என்.வி.என் சோமு குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று மாநிலங்களவையில் பேசிய கனிமொழி என்.வி.என் சோமு,"தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு போதிய நிதியுதவி அளித்துள்ளதா ?. இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவர்களை பணியில் அமர்த்த உருவாக்கியுள்ள திட்டங்களின் விவரங்கள் என்ன?.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆஷா பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்களை பணியமர்த்துவதற்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சிறப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை என்ன? என மக்களவையில் தி.மு.க MP கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மக்களவையில் பேசிய கே. ஈஸ்வரசாமி,”பிற நாடுகளின் உதவியுடன் இணையத்தில் நடக்கும் சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் மற்றும் பல கணினி சார்ந்த குற்றங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?.

இது தொடர்பாக நாட்டிலுள்ள காவலர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் பயிற்சி அளிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தால் அதன் விவரங்களை வெளியிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories