
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் குல்கர்னி. இவர் நிதி நிறுவன ஏஜெண்ட்டாக உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்கள் அவரை வழிமறித்து மொமைல் ஹாட்ஸ்பாட்டை பகிர வலிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிரி மறுத்துள்ளார். இதனால் இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் ஆவேசம் அடைந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை குத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை அடுத்து இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








