இந்தியா

”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” : மக்களவையில் கனிமொழி MP ஆவேசம்!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது என மக்களவையில் கனிமொழி எம்.பி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” : மக்களவையில் கனிமொழி MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

அதனால்தான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததுபோல் இன்று வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்த மசோதா மீது பேசிய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்.பி, "வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கே எதிரானது.

மதச்சார்பற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை எல்லோரும் இழந்துவிடுவார்கள். ஒருவர் மதத்தின் உரிமையில் மற்றறொரு மதத்தை சேர்ந்த ஒருவர் தலையீடுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

அரசு சொத்துகள் வக்ஃபு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. வக்ஃபு வாரிய சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக முன்தேதியிட்டு சட்டத்தை அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? நாட்டின் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் எதிரானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்களவையில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் MP, ”நாட்டின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்தோடு வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தில் அரசு தலையிடுவது ஆபத்தானது. எனவே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories