இந்தியா

25 லட்ச மக்கள் பாதிப்பு... தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூழ்கிய 150 கிராமங்கள் - அசாமில் அவலம்!

25 லட்ச மக்கள் பாதிப்பு... தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூழ்கிய 150 கிராமங்கள் - அசாமில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வட கிழக்கு மாநிலங்கள் மிகவும் மோசமடைந்துள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள பாதிப்பு காரணமாக பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கே இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காசிரங்கா தேசிய பூங்காவில் 92 விலங்குகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 114 விலங்குகள் உயிரிழந்துள்ளது. அதோடு 150 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

25 லட்ச மக்கள் பாதிப்பு... தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூழ்கிய 150 கிராமங்கள் - அசாமில் அவலம்!

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. லட்சக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கிருக்கும் பல்வேறு கட்சியினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓடி வருவதால் பொதுமக்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அசாம் மட்டுமின்றி, பீகார், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என ஒரு சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories