இந்தியா

”இந்துவா என்பதை அறிய DNA பரிசோனை வேண்டும்” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்துவா என்பதை அறிய DNA பரிசோனை வேண்டும் என ராஜஸ்தான் பா.ஜ.க அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”இந்துவா என்பதை அறிய DNA பரிசோனை வேண்டும்” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியாவை இந்து ராஜியமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் படிசெயல்பட்டு வருகிறது. இதனால் சிறுபான்மை மக்கள் மீதான இந்து வெறுப்பு அரசியலை பா.ஜ.க தலைவர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் கூட, கூட்டணி தயவில் ஆட்சியில் இருக்கும் போது கூட இந்துத்துவ அரசியலை செய்து வருகிறது. அதன்வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் கல்வித் துறை அமைச்சர் மதன் திலாவர், இந்துவா என்பதை அறிய DNA பரிசோனை வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியி ஒன்றில் பேசிய அவர், “ஒருவர் இந்துவா? இல் லையா? என்பதை அவர் களின் டிஎன்ஏவை வைத்து பரிசோதனை செய்ய வேண் டும். அவர்கள் இந்துவாக இல்லையென்றால், அவர் களின் தந்தை யார்? என் பதை கண்டுபிடிக்க வேண்டும்” என மதவெறியை தூண்டும் வகையில் பேசினார்.

இவரது பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந் நிலையில், “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக் கும் பாரதிய ஆதிவாசி கட்சி யினர் அமைச்சரின் பேச்சை கண்டித்து பன்ஸ்வாராவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஆதிவாசி கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராஜ்குமார் ரோட் மற்றும் கட்சித் தொண்டர்கள் தங் கள் ரத்த மாதிரிகளை கைகளில் பிடித்துக் கொண்டு அமைச்சர் மதன் திலாவரின் இல்லத்தை நோக்கி பேர ணியாகச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து, அமர் ஜவான் ஜோதி அருகில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என தகவல்வெளி யாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories