இந்தியா

பீகாரில் 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்... அம்பலமாகும் பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் !

பீகாரில் 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்... அம்பலமாகும் பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் இங்கு, தற்போது ஒன்றன் பின் ஒன்றாக பாலம் இடிந்து விழும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் மாதேபூர் பிளாக்கில் ஆற்றின் குறுக்கே சுமார் 75 மீட்டர் அளவிலான பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்தே கட்டப்பட்டு வரும் இந்த பாலம், தற்போது இடிந்து விழுந்துள்ளது. அங்கே பரவலான மழை பெய்து வருவதால், அந்த ஆற்றின் நீர்மட்டம் சுமார் 25 மீட்டர் அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பீகாரில் 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்... அம்பலமாகும் பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் !

இதன் காரணமாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதியின் தூண் திடீரென இடிந்து விழுந்ததால், மொத்த பாலமும் நிலைகுலைந்தது. இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு முன்னதாக தொடர்ந்து 4 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த 5 பாலங்கள் பட்டியல் :

* ஜூன் 19-ம் தேதி அராரியா பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்தது. சுமார் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், திறப்பு விழாவுக்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது.

* ஜூன் 22-ம் தேதி சிவான் பகுதியில் அமைந்துள்ள கண்டக் கால்வாய்-க்கு மேலே கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

* ஜூன் 23-ம் தேதி கிழக்கு சம்பாரண் பகுதியில் கட்டுமான பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்தது.

* ஜூன் 26 கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பாலமும் இடிந்தது.

* ஜூன் 27 (நேற்று) மதுபானி பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலமும் இடிந்தது.

banner

Related Stories

Related Stories