இந்தியா

கலப்பு திருமணம் - பாதுகாப்பு கோரிய ஜோடி : மனுவை தள்ளுபடி செய்த ம.பி நீதிமன்றம்!

மத்திய பிரதேசத்தில் கலப்புத் திருமணம் செய்யப் பாதுகாப்பு கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கலப்பு திருமணம் - பாதுகாப்பு கோரிய ஜோடி : மனுவை தள்ளுபடி செய்த ம.பி நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் சபி கான். இஸ்லாமியரான இவர் சரிகா சென் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் தங்களது குடும்பத்தினர் எதிர்ப்பை மீறிப் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ”தங்களது திருமணத்திற்குப் பதிவு செய்வதற்கு போலிஸார் பாதுகாப்பு வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் இந்த காதல் ஜோடி மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ”இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண், சிலை அல்லது நெருப்பை வழிபடும் பெண்ணை திருமணம் செய்வது செல்லாது என இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது. எனவே திருமண பதிவுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க முகாந்திரம் இல்லை” என கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இந்த மனு தள்ளுபடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணத்திற்கு சட்டப்படி உரிமை இருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியே இப்படி மதத்தின் கொள்கைகளை வைத்து முடிவு செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories