இந்தியா

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல் : புயலால் தமிழ்நாட்டில் ஏற்படும் மாற்றம் என்ன ?

வடக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல் : புயலால் தமிழ்நாட்டில் ஏற்படும் மாற்றம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த நிலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து இது வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டது.

அதன்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் கடந்த மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

ரீமால் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தென் தென் கிழக்கே சுமார் 360 கி.மீ, தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தெற்கு தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல் : புயலால் தமிழ்நாட்டில் ஏற்படும் மாற்றம் என்ன ?

தொடர்ந்து ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்க கடலில் தீவிர புயலாக வலுவடையும் என்றும், தொடர்ந்து நாளை நள்ளிரவு வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதியான சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110-120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்றும், இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

banner

Related Stories

Related Stories