இந்தியா

உ.பி-யில் ஓடும் பேருந்தில் அட்டகாசம் : பாஜக நிர்வாகி மற்றும் ஆதராவாளர்களை பொளந்தெடுத்த பொது மக்கள்!

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் ஓடும் பேருந்தில் பாலியா நகர் பாஜக தலைவர் உதய்வீர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உ.பி-யில் ஓடும் பேருந்தில் அட்டகாசம் : பாஜக நிர்வாகி மற்றும் ஆதராவாளர்களை பொளந்தெடுத்த பொது மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் மாநிலங்களில் பொதுவாகவே பாஜகவினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருவர். பாலியல், வழிப்பறி, கஞ்சா கடத்தல், கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவர். அதோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவர். இதனாலே ரௌடிகள், குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முனைகின்றனர்.

அந்த வகையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட சண்டையில் பாஜக நிர்வாகிக்கு பொதுமக்கள் சரமாரியான தாக்குதலை கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் பேருந்து ஒன்றில் பாலியா நகர் பாஜக நிர்வாகி மற்றும் ஆதரவாளர்கள் பயணித்துள்ளனர். இந்த சூழலில் அங்கே இருக்கைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

உ.பி-யில் ஓடும் பேருந்தில் அட்டகாசம் : பாஜக நிர்வாகி மற்றும் ஆதராவாளர்களை பொளந்தெடுத்த பொது மக்கள்!

இதனால் பாஜக நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாலிபர் ஒருவரிடம் சண்டையிட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், பாஜக நிர்வாகியை அங்கிருந்த பொதுமக்கள் ஓடும் பேருந்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தின் பேரில், 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "நேற்று (மே 19) பேருந்து கௌரிபாண்டாவில் இருந்து வந்துகொண்டிருக்கையில் பாஜக நிர்வாகி உதய்வீர் சிங், அவரது ஆதரவாளர்களுக்கும் அங்கிருந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் பலருக்கும் கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories