இந்தியா

”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது என்ற அமித் மாளவியாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதில் காட்டிய அக்கறையைவிடச் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை எப்படி இந்நாட்டில் விதைக்கமுடியும் என்பதில்தான் அதிகமாக மெனக்கெடுத்தனர்.

’ஜெய்ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்லி இஸ்லாமிய மக்களை இந்துத்துவா வாதிகள், கட்டிவைத்து அடித்த சம்பவங்கள் நாடெங்கும் நடந்தது. மேலும் இஸ்லாமிய பகுதிகளில் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தினர்.

இப்படி பா.ஜ.க ஆட்சியின் 10 ஆண்டுகளும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுத்த ஆட்சியாகத்தான் இருந்து வந்தது. தற்போது மக்களவை தேர்தல் நேரத்தில் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் வரை பலரும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது என பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா x சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும், ”இந்து மக்கள் தொகை குறைவதற்குக் காங்கிரஸ் கட்சியே காரணம். இதனால்தான் பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க கோருகிறது” என பேசியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு சிறுபான்மை மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”1950 மற்றும் 2015-க்கு இடையில் இந்துக்களின் மக்கள் தொகை 7.8% குறைந்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories