இந்தியா

வடமாநிலங்களில் தலைதூக்கும் பா.ஜ.க.வின் அட்டூழியம்! : தேர்தலில் அதிகரிக்கும் குளறுபடி!

வாக்குச்சாவடிகளை கட்சி அலுவலங்களுக்கு இணையாக கையாளும் பா.ஜ.க.வினர். தட்டி கேட்காத தேர்தல் அதிகாரிகள்.

வடமாநிலங்களில் தலைதூக்கும் பா.ஜ.க.வின் அட்டூழியம்! : தேர்தலில் அதிகரிக்கும் குளறுபடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

வாக்குச்சாவடியில் பூஜை, கள்ள ஓட்டு, குழந்தைகளை வாக்களிக்க வைப்பது என பல்வேறு அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கிற வடமாநிலங்களில், தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என கேள்வியெழும் வகையில், பா.ஜ.க.வினர் நடவடிக்கை இருந்து வருகிறது.

அவ்வகையில், பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிரத்தின், பாராமதி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்திற்கு பூஜை செய்துள்ளனர் மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாளி சகங்கர் உள்ளிட்ட 7 அஜித் பவார் கட்சி நிர்வாகிகள்.

வடமாநிலங்களில் தலைதூக்கும் பா.ஜ.க.வின் அட்டூழியம்! : தேர்தலில் அதிகரிக்கும் குளறுபடி!

அதனையடுத்து, குஜராத் மாநிலத்தின் தாஹோத் தொகுதிக்கு உட்பட்ட பர்த்தம்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ளூர் பா.ஜ.க நிர்வாகி மகன் விஜய் பபோர் கள்ள ஓட்டுப்போட்டுவிட்டு, அதனை காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்தில், வாக்களிக்க சென்ற நிர்வாகி, தனது சிறு வயது மகனையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்துள்ளதான காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறு, பா.ஜ.க.வின் அட்டூழியங்கள் நாடு அறிய வளர்ந்து வரும் நிலையில், அது குறித்து, எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, தேர்தல் ஆணையத்தின் மீது இருக்கிற நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், “இது போன்ற நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் தடை போட முடியும். ஆனால், செய்யாது. தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் கிடையாது. ஏனெனில் அவர்களும் மோடிக்கு தான் வேலை பார்க்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

அதனைப் போலவே, மோடியின் வெறுப்பு பேச்சுகளையெல்லாம் கேட்டுக்கொண்டு, தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை முன்மொழிந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories