இந்தியா

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க எட்டு பேர் குழுவை கொல்கத்தா போலீஸ் அமைந்துள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஒருவர், ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில், ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது பதவி உயர்வுக்காக ஆளுநரை பிற்பகல் 12 .45 மணிக்கு சந்தித்ததாகவும், அப்போது ஆளுநர் அருவருக்கத்தக்க விதத்தில் தன்னை தொட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே இரண்டாம் தேதி ஆளுநர் தன்னை மீண்டும் அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்படி ஆளுநரை சந்திக்க தனது சூப்பர்வைசருடன் சென்றதாகவும், சற்று நேரத்தில் ஆளுநர் சூப்பர்வைசரை அனுப்பிவிட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !

இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மேற்கு வங்க போலீசார் தீவிரமான இயங்கி வருகின்றனர்.

அதே நேரம் ஆளுநருக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளதால் அவர் மீது வழக்கு தொடர போலீசார் சட்ட ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும் அனுமதி கிடைத்ததும் ஆளுநர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை நடத்த கொல்கத்தா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் எட்டு பேர் குழுவை கொல்கத்தா போலீஸ் அமைந்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories