அரசியல்

"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !

பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று ராஜ்புத் சமூக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றுவரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் குஜராத் ராஜ்கோட் தொகுதிக்கு ஒன்றிய அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ராஜ்புத் சமூகத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ராஜ்புத் சமூகத்தினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கோரினார்.

எனினும் ரூபாலாவை மாற்ற வேண்டும் என பாஜகவை வலியுறுத்தி ராஜ்புத் சமூகத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

parshottam rupala
parshottam rupala

இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று ராஜ்புத் சமூக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு ராஜ்புத் சமூகத்தினரின் மாநாடு குஜராத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ராஜ்புத் சமூகத்தினர் கலந்துகொண்டனர். அப்போது, பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவரையும் கைகளை உயர்த்த செய்து பாஜகவுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது, பாஜகவை குஜராத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ராஜ்புத் சமூக மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு தொடர்ந்து வாக்கு செலுத்தி வரும் நிலையில், அவர்களின் புறக்கணிப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories