இந்தியா

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!

சீனப் பொருட்களின் இறக்குமதி 54.76% அதிகரித்து 2023-ல் 101 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? :  மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தின் விவரம் வருமாறு: -

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வாக்களார்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உள்ளது. மேலும் அவர்களுக்கு நாங்கள் விளக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களுக்குதான் நாங்கள் விளக்க வேண்டி இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே சமாதானக் கொள்கை நீங்களும், உங்கள் அமைச்சர்களும் சீனாவை திருப்திப்படுத்தியதுதான். இன்றுகூட நீங்கள் சீனாவை விமர்சிக்க மறுக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கான சீனப் பொருட்களின் இறக்குமதி 54.76% அதிகரித்து 2023-ல் 101 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

1947 முதல் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தான் என்பது அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீட்டை ஒழிக்க அரசியல் சட்டத்தை மாற்ற நினைப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க தான்.உங்கள் தலைவர்கள் அதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 16வது பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில் SC, ST மற்றும் OBC களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு காரணமாக நீங்கள் கவலையடைந்து இருக்கிறீர்கள். இதனால் மதத்தின் பெயரால் வாக்காளர்களை திரட்டப்பார்கிறீர்கள். சமத்துவமின்மை பற்றி பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை.

நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றிப் பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்குமான வளர்ச்சி குறித்து பேசுகிறது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறீர்கள். எனவே எங்களுடைய தேர்தல் அறிக்கை மற்றும் நீங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories